தமிழகம் முக்கியச் செய்திகள்

அதிமுகவில் ஏதாவது நடக்குமா என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார்: செல்லூர் ராஜு

அதிமுகவில் ஏதாவது நடக்குமா என ஸ்டாலின் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

மதுரை மாகூப்பாளையத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 23 ஆயிரம் மாணவ – மாணவியிருக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் எப்படியாவது முதல்வர் ஆக நினைக்கிறார், இப்போதே முதல்வர் ஆகிவிட்டது போல ஸ்டாலின் நினைக்கிறார் என்ற செல்லூர் ராஜு, ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது ஏன் மக்களுக்கு திட்டங்களை செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

முதல்வர் மக்களோடு மக்களாக சென்று எளிமையாக செயல்படுவதால் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மதுரையில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை என கனிமொழி தவறான தகவலை சொல்லி வருகிறார். திமுக ஆட்சி காலத்தில் எந்தவொரு திட்டங்களும் செய்யவில்லை, ஸ்டாலினுக்கு ஒரே கனவு மட்டுமே உள்ளது, ஸ்டாலின் எப்படியாவது முதல்வர் நாற்காலியை பிடிக்க நினைக்கிறார், அதிமுகவில் ஏதாவது நடக்குமா என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார் எனவும் குற்றம்சாட்டினார் செல்லூர் ராஜு.

Advertisement:

Related posts

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து: முன்பதிவு தொடங்கியது!

Dhamotharan

அண்டை வீட்டாரை கொன்று, அவரின் இதயத்தை சமைத்து விருந்து படைத்த நபர்!

Karthick

வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Saravana

Leave a Comment