செய்திகள்

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்டப்படும் : ராஜலெட்சுமி!

மதுரை விமான நிலையத்துக்கு விரைவில் முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்டப்படும் என சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் ராஜலெட்சுமி தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட மடத்துப்பட்டி, ராமையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, மக்களிடம் பேசிய அமைச்சர் ராஜலெட்சுமி, அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் இட ஒதுக்கீடு தொடர்பான பொதுமக்களின் கோரிக்கை, முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

மேலும், அதிமுக தலைமையிலான அரசு அமைய, பொது மக்கள் ஆதரவு தர வேண்டும் எனவும் ராஜலெட்சுமி கேட்டுக்கொண்டார்.

Advertisement:

Related posts

மதுரையில் சுவர் விளம்பரத்தால் அதிமுக – பாஜகவினரிடையே வாக்குவாதம்!

Jeba

சிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்பு!

Jeba

கரூரில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!

Gayathri Venkatesan