தமிழகம் முக்கியச் செய்திகள்

மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பொய் பேசிவிட முடியுமா?- அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!

திமுக கிராம சபை கூட்டங்களில் பொய் பரப்புரை செய்யும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பொய் பேசிவிட முடியுமா என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில், பொய் தேர்தல் அறிக்கை மூலம் திமுக வெற்றி பெற முடியாது எனவும், அதிமுக அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்து வைத்தாலே திமுக டெபாசிட் இழந்துவிடும் எனவும் தெரிவித்தார். திமுக கிராமசபை கூட்டங்களில் பொய் பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின், சட்டசபையில் பேசிவிட முடியுமா? என்றும், வாயை திறந்தால் பூட்டிவிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பயந்து ஸ்டாலின் பதில் சொல்ல முடியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறார் எனவும், தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் முழுமையான நிவாரணம் அல்ல எனவும், விரைவில் கூடுதலான நிவாரணத் தொகையை முதல்வர் அறிவிப்பார் எனவும் கூறினார்.

Advertisement:

Related posts

‘நல்ல சிகிச்சை கிடைத்தால் பிழைப்பேன்’: உதவி கேட்ட நடிகர் கொரோனாவுக்கு பலி!

Karthick

கொரோனா பணிகளில் பயிற்சி மருத்துவர்கள்!

L.Renuga Devi

மனைவிக்கு கொரோனா தொற்று: மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்துக்கொண்ட கணவர்

Ezhilarasan

Leave a Comment