செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எடுபடாது: அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எடுபடாது என்றும், அதிமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடக்கிறது. இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியாயின. இதில் திமுக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, பொதுமக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், அதிமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று கூறினார்.

அதிமுக தொண்டர்கள், தேர்தல் நேரத்தில் இருந்தது போன்று, வாக்கு எண்ணிக்கை நேரத்திலும் உற்சாகத்தோடு இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தபால் வாக்குகளில் கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதையே தான் பின்பற்ற வேண்டும் என்றும், தபால் வாக்குகளை முதலில் தான் என்ன வேண்டும் எனவும் கூறினார்.

தேர்தல் ஆணையம் விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், சுமூகமான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Advertisement:

Related posts

முதல்வர் பழனிசாமி நாளை வேட்பு மனுத்தாக்கல்!

Gayathri Venkatesan

வேதாரண்யம் மீனவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட நிவர் மற்றும் புரெவி புயல்கள்!

Jeba

எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது: திமுக அறிக்கையில் இடம்பெற்ற திருத்தங்கள்!

Gayathri Venkatesan