இந்தியா முக்கியச் செய்திகள் வாகனம்

நடப்பாண்டில் 10-ஆயிரம் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்க திட்டம்

நாட்டின் தலைசிறந்த சொகுசு கார் விற்பனை நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் நடப்பாண்டில் 10-ஆயிரம் கார்களை விற்பனைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிறகு விற்பனை விகிதத்தை அதிகரிக்கும் முனைப்புடன் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. கொரோனா பொது முடக்கம் காரணமாக இந்நிறுவனம் கடந்த ஆண்டு விற்பனையில் 43 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டது.

இந்நிலையில் நடப்பாண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கார்கள் விற்பனையை 25 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முதற்கட்டமாக 10,000 கார்களை விற்கத் திட்டமிட்டுள்ளது.

மெர்ஸிடஸ் நிறுவனம் கொரோனா காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிறகு கடும் சவால்களைச் சந்தித்துவருகிறது. வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் சொகுசு கார்களின் சந்தை இன்னும் வளர்ச்சி அடையவில்லை. கடந்த 2020-ம் ஆண்டிற்கான மொத்த கார்கள் விற்பனையில் சொகுசு கார்களின் பங்களிப்பு வெறும் ஒரு சதவீதம் மட்டுமே. இது கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும்.

இதுகுறித்து மெர்ஸிடஸ் பென்ஸின் நிறுவனத்தின் இந்திய இயக்குநர் சந்தோஷ் ஐயர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “ அரசாங்கம் தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி மற்றும் இதர வரிகளை எளிமைப்படுத்திட வேண்டும். எங்களுடைய நிறுவனம் சார்பில் (E-Class sedan ) என்ற புதிய ரக காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளோம். இதனுடைய ஆரம்ப விலை ரூ.63.9 லட்சத்திலிருந்து ரூ. 81 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

Advertisement:

Related posts

கன்னியாகுமரி சிறுவனுக்கு ஷு வாங்கிக் கொடுத்த ராகுல் காந்தி!

Gayathri Venkatesan

துணைவேந்தர் சூரப்பா வழக்கில் விசாரணை ஆணையத்துக்கு 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு!

Gayathri Venkatesan

மெகபூப முப்தி பாஸ்போர்ட் நிராகரிப்பு!

L.Renuga Devi