உலகம் செய்திகள் முக்கியச் செய்திகள்

அமெரிக்க வெள்ளைமாளிகை மீனா ஹாரிஸூக்கு விடுத்த எச்சரிக்கை!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரின் பிரபலத்தை பயன்படுத்தி தனது பெயரை வளர்த்துக்கொள்ள வேண்டாம் என மீனா ஹாரிஸுக்கு வெள்ளைமாளிகை எச்சரிக்கை செய்துள்ளது.

வழக்கறிஞர் மற்றும் தொழில்முனைவர் மற்றும் எழுத்தாளரான மீனா ஹாரிஸ், கமலா ஹாரிஸின் தங்கை மகள் ஆவார். இவர் ‘Kamala and Maya’s Big Idea’ என்ற நூலை எழுதியுள்ளார். மேலும் Phenomenal என்ற ஆடை தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அந்நிறுவனம் வெளியிட்ட ஆடையில் கமலா ஹாரிஸை குறிப்பிடும் வகையில் ‘Vice President Aunty’ என அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதனைக் கண்டித்த வெள்ளைமாளிகை அது நடப்பு சட்டத்திற்கு எதிரான செயல் எனத் தெரிவித்திருந்தது.

இதுபோன்று துணை அதிபர் பெயரை தனிப்பட்ட முறையிலும் வணிக ரீதியாகவும் மீனா ஹாரிஸ் பயன்படுத்தி வரும் போக்கு வெள்ளமாளிகை அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மீனா ஹாரிஸ் தனது பெயரை வளர்த்துக்கொள்ள, கமலா ஹாரின் பிரபலத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் மேலும் இந்த நடவடிக்கையை மீனா ஹாரிஸ் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வெள்ளைமாளிகை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனா ஹாரிஸ் எழுதி வெளிவந்த ‘Amibitious Girl!’ புத்தகம், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கும் ஒருநாள் முன்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

புதுச்சேரியில் வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டுமே கொரோனா தட்டுப்பூசி; சுகாதாரத்துறை தகவல்!

Saravana

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இதுவரை எந்த தொற்றும் ஏற்படவில்லை- ராதாகிருஷ்ணன்!

Jayapriya

திருமணத்தை தாண்டிய உறவு: கணவனை கொலை செய்த மனைவி-காதலனுடன் கைது!

Gayathri Venkatesan

Leave a Comment