செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

மயிலாடுதுறையில் திடீர் பயங்கர சத்தத்தால் பரபரப்பு!

மயிலாடுதுறையில் கோவங்குடி கிராமத்தின் வழியே சென்ற ராணுவ பயிற்சி வாகனத்தில் ஏர்லாக் விடுவிக்கும்போது ஏற்பட்ட சத்தம், மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோவங்குடி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய பகுதிகளில் இன்று காலையில் திடீரென பெரும் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தம் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திவுள்ளது.

அந்த சத்தத்தால், ஒரு சில பகுதிகளில் உள்ள வீடுகளில் அதிர்வு உணரபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தெரிவித்தார்.

தொடர்ந்து இதுகுறித்த அறிந்த வட்டாட்சியர் பிரான்சுவா, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, இந்திய ராணுவ பயிற்சி வாகனத்தில் ஏர்லாக் விடுவிக்கும்போது சத்தம் ஏற்படுவது வழக்கம். இன்று மயிலாடுதுறை வழியே சென்ற ராணுவ பயிற்சி வாகனத்திலிருந்து இந்த சத்தம் வந்ததாகவும், இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? – ராதாகிருஷ்ணன் பதில்

Niruban Chakkaaravarthi

கொரோனாவிலிருந்து மீண்டார் சச்சின்!

Karthick

திட்டமிட்டபடி ஐபிஎல் டி20 தொடர் நடைபெறும் : சவுரவ் கங்குலி

Karthick