மும்பையின் தாதர் பகுதியில் உள்ள காய்கறிகள் சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதன்காரணமாக கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 25,833 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதனடிப்படையில், அவுரங்காபாத், நாக்பூர் மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் கொரோனா ஊரடங்கு காரணமாக மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதன்காரணமாக மும்பையில் உள்ள தாதர் காய்கறி சந்தையில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள், காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் காய்கறிகளை வாங்க மக்கள் கூடியதால் அப்பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது. இதனால் மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் மும்பையில் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தத் திட்டமிட்டு இருப்பதாக கூறினார். மேலும் தாதர் காய்கறி சந்தையை இடம் மாற்றம் செய்வதாகவும் கூறியுள்ளார்.
Advertisement: