சினிமா முக்கியச் செய்திகள்

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்!

கர்ணன் திரைப்படத்தை வெற்றியடைச் செய்த ரசிகர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

கர்ணன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இவரது முதல் படமான பரியேறும் பெருமாள் பெற்ற பெரும் ஆதரவுதான், இவரது அடுத்த படைப்பான கர்ணன் திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இத்திரைப்படத்தைப் பார்த்த நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் மாரி செல்வராஜைக் கட்டியணைத்துப் பாராட்டு தெரிவித்தார். சினிமா விமர்சகர்களும், படத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசி வருகின்றனர்.

கொரோனா பெறும் தொற்று காலத்திலும், படம் வெளியான முதல் நாளிலே எல்லா திரையரங்குகளும் நிரம்பி வழிந்தன. பல்வேறு தரப்பினரும் இப்படத்திற்குச் சாதகமாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

மேலும் இப்படத்தின் கதாநாயகியான ரஜிஷா விஜயனும் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டில் ” படத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் அர்த்தமில்லை: பிரதமர் மோடி

Nandhakumar

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த மூவர் நியமனம்!

Karthick

திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு: ஒபிஎஸ்!

Saravana Kumar