இந்தியா முக்கியச் செய்திகள்

கூகுள் மேப் சேவைக்கு போட்டியாக களமிறங்கும் மேப் மை இந்தியா!

சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தின் மேப் செயலிக்கு மாற்றாக, இந்தியாவில், மேப் மை இந்தியா என்கிற நிறுவனமும், இஸ்ரோவும் இணைந்து புதிய மேப் செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம், கூகுள் மேப் செயலிக்கு மாற்றாக உள்நாட்டு மேப் செயலியை களத்தில் இறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புதிய செயலி மூலம், குறிப்பிட்ட இடத்தின் காலநிலை, காற்று மாசு, வெள்ள பாதிப்பு குறித்த தகவல்களையும் நாம் தெரிந்துகொள்ள முடியும்.

இது குறித்து பேசிய மேப் மை இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ, ரோஹன் வர்மா, “இந்நிறுவனம் உள்நாட்டு நிறுவனம், இதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டினை உறுதிப்படுத்துகின்றோம். மேலும், நாட்டின் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு இது செயல்படும்.” என கூறியுள்ளார்.

இந்த சேவையானது தற்சார்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. மேலும், இது முற்றிலும் பாதுகாப்பானதாகவும், இஸ்ரோவுடன் இணைந்து செயல்படுவதால் புவியில் கூறுகள் குறித்த தகவல்களை துல்லியமாக வழங்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.

முன்னதாக சமீபத்தில் மத்திய அரசு விண்வெளி துறையில் தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் எனும் புதிய பிரிவை தொடங்கியிருந்தது. இதன் மூலம் தனியார் பங்களிப்பை இத்துறையில் ஊக்குவிப்பது, அவர்களுக்கு உதவுவது என பல நோக்கங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

கோயில் அடித்தளத்திற்காக தோண்டப்பட்ட குழியில் 11,000 லிட்டர் பால், நெய் ஊற்றி வழிபாடு!

Jayapriya

கர்நாடக துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை; விசாரணை தீவிரம்!

Jayapriya

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்

Niruban Chakkaaravarthi

Leave a Comment