தமிழகம்

தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக விளங்கிய பொல்லானுக்கு மணிமண்டபம் கட்டப்படும்! – முதல்வர் பழனிசாமி

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக விளங்கிய பொல்லானுக்கு, அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள வளையகாரனூரில், ஆதி தமிழர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆதரவு மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர், சொந்த வீடு அல்லது வீட்டுமனை இல்லாத அருந்ததியர் மக்களுக்கு, அரசு சார்பில் வீட்டுமனை வழங்கி 50 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று உறுதியளித்தார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் புரிந்த தீரன் சின்னமலையின் போர்ப்படை தளபதியாக விளங்கி, வெற்றிகளை ஈட்டிய பொல்லானுக்கு தமிழக அரசு சார்பில் முழு திருவுருவ சிலையுடன் மணிமண்டபம் கட்டப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Advertisement:

Related posts

ஆர்.எஸ்.பாரதி மீது அதிமுகவினர் போலீஸீல் புகார்

Niruban Chakkaaravarthi

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

Dhamotharan

”தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது”- கனிமொழி!

Jayapriya

Leave a Comment