செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

ஸ்டாலின் முதல்வராக வேண்டி கைவிரலை துண்டித்த நபர்!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டி சாத்தூர் இருக்கன்குடி கோவிலில் சிவகாசியை சேர்ந்தவர் வேண்டுதலுக்காக கைவிரலை துண்டித்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இன்றோடு அரசியல் கட்சியினர் தங்களது பரப்புரையை முடித்துகொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் இன்று மாலை 7 மணியுடன் பரப்புரை நிறைவுபெறுகிறது

இந்நிலையில் சிவகாசியை சேர்ந்த குருவைய்யா என்பவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அதை நிறைவேற்றும் பொருட்டு சாத்தூர் இருக்கன்குடி கோவிலில் சென்று, தனது கையின் கட்ட விரலை துண்டித்துகொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement:

Related posts

வியட்நாமில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க பயிற்சி மையம்!

Saravana Kumar

’அரசியலுக்கு வாங்க ரஜினி’… சென்னையில் ரசிகர்கள் போராட்டம்!

Jayapriya

தமிழகத்தின் பல இடங்களில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

Nandhakumar