இந்தியா தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தேர்தல் பரப்புரைக்குத் தடை: போராட்டத்தில் இறங்கும் மமதா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி 24 மணி நேரத்திற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் ஹூக்லி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி நடந்த தேர்தல் பரப்புரையில் மேற்கு வங்க முதல்வர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பரப்புரையின் போது அவர் மத நல்லிணக்கத்திற்கு பாதகமாக பேசியதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீரியதாக தெவித்து, அவர் இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணிவரை பரப்புரை மேற்கொள்ள தடைவித்துள்ளது. வரும் நாட்களில் மமதா பானர்ஜி இதுபோன்று பொது நிகழ்வில் பேசக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதுபோல தமிழகத்தில் திமுக நட்சத்திர பேச்சாளரும், திமுக எம்பியுமான ஆ. ராசா, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தவறாக பேசியதால் 48 மணி நேரத்திற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டது. மேலும் இதற்கு எதிராக ஆ. ராசா மேல் முறையீடு செய்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் தடைவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக மமதா பானர்ஜி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறுகையில்’தேர்தல் ஆணையம் அரசியலமைப்புக்கு விரோதமான மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் செய்ய உள்ளேன். காந்தி மூர்த்தி சிலைக்கு அருகில் நாளை போராட்டம் நடைபெறும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

இணையதள பக்கம் உருவாக்கிய ட்ரம்ப்!

L.Renuga Devi

மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் வசூல்!

Saravana Kumar

குழந்தைகளுக்கு வாழ்த்து சொல்ல வரும் விர்ச்சுவல் கிறிஸ்துமஸ் தாத்தா!

Jayapriya