செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் – மகேந்திரன் வாக்குறுதி

சிங்காநல்லூர் தொகுதியில் சிறு, குறு தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் என மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் வாக்குறுதி அளித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும் அக்கட்சியின் துணை தலைவருமான டாக்டர் மகேந்திரன், தொகுதிக்குட்பட்ட பீளமேடு, ஆவாரம்பாளையம், ஜெகநாதன் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், சிறு, குறு தொழிற்சாலைகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தார். சாலை, குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித் தரப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். பரப்புரையின் போது மகேந்திரனுக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

Advertisement:

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை!

Saravana

டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார் முதலமைச்சர் பழனிசாமி!

Saravana

ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி புதிய கட்சி தொடங்க முடிவு!

Niruban Chakkaaravarthi