தாம்பரத்தில் நடைபெற்று வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்கம் விழாவில் தேர்தல் குறித்து பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்கம் விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக மற்ற கட்சிகளுடன் கூட்டணி முடிவு மற்றும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்கம் விழாவை முன்னிட்டு வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கான விருப்ப மனு விநியோகம் சென்னையில் இன்று தொடங்கியது.
இந்நிகழ்வை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். ஆன்லைன், ஆப்லைன் என இரு முறைகளிலும் விருப்பமனுவை தாக்கல் செய்யலாம் எனவும், கமல்ஹாசன் பெயரிலும் மனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.