இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

பட்டுப்போன மரம் பென்சிலாக மாறியது!

மகாராஷ்டிரா வை டவுனில் உள்ள டிராவிட் உயர்நிலைப் பள்ளியில் பட்டுப்போன ‘சில்வர் ஓக்’ மரம் தற்போது பென்சில் போல் வடிவமைக்கப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்துவருகிறது.


மகாராஷ்டிராவில் வை டவுனில் (Wai Town) உள்ளது டிராவிட் உயர்நிலைப் பள்ளி. இந்த பள்ளி விடுதலை போராட்ட வீரர் பால கங்காதர திலகர் போன்றவர்களால் 150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகும். தற்போது கொரோனா நோய்த் தொற்று காரணமாகக் கடந்த ஒரு வருடமாகப் பள்ளி செயல்படாமல் உள்ளது. இப்பள்ளியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சில்வர் ஓக் மரம் ஒன்று பட்டுப்போகத் தொடங்கியுள்ளது.

இதனையெடுத்து பள்ளி நிர்வாகம் பட்டுப்போன சில்வர் மரத்தை வெட்டி விற்காமல் அதனை கலைநயமிக்க பொருளாக மாற்ற நினைத்துள்ளனர்.
“பட்டுப்போன மரத்தை அகற்றுவதற்குக் கூடுதல் செலவு பிடித்தது. பின்னர் இதனை ஒரு கலைநயமிக்க பொருளாக மாற்ற முடிவு செய்தோம். இதற்காக இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் தச்சர் ஒருவரை இதற்காக நியமித்தோம். இந்த மரத்தை பென்சிலாக மாற்ற 5,6 நாட்கள் ஆனது” என பள்ளி தலைமை ஆசிரியர் நாகேஷ் கூறினார். இந்த பென்சில் மரத்தின் நீளம் ஆறு அடியாகும். பட்டுப்போன சில்வர் ஓக் மரம் தற்போது கல்வி விழிப்புணர்வு ‘பென்சில் மரமாக’ கம்பீரமாக நிற்கிறது.

Advertisement:

Related posts

முதல்வர் பழனிசாமியுடன் நேருக்குநேர் விவாதிக்கத் தயார்: மு.க.ஸ்டாலின்

Jeba

மநீம கூட்டணிக்கு தேமுதிக வந்தால் வரவேற்போம்!

Karthick

தேவேந்திர குல வேளாளர் குறித்த சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்!

Jeba