இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

மகாராஷ்டிராவில் நாளை முதல் இரவு ஊரடங்கு!

மகாராஷ்டிராவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த, நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்துவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று புதிதாத 62,258 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் மகாராஷ்டிராவில் மட்டும் 35,952 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ப்பட்டது.

இந்த எண்ணிக்கை உயர்வானது, அம்மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவ தொடங்கிய ஆரம்ப காலத்தை காட்டிலும் அது அதிகமாகும். மேலும் நேற்று 112 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவர்களின் எண்ணிக்கை 2,82,451 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அம்மாநிலத்தில் தீவிரமடைந்து வரும் இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுபடுத்த நாளை (மார்ச் 28) முதல் இரவு ஊரடங்கு உத்தரவை அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பிறபித்துள்ளார்.

அதன்படி இரவு 8 மணி முதல் காலை 7 மணிவரை உணவகங்கள், மால்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து வணிக வாளாகங்களும் மூடப்பட்டிருக்கும். மேலும் ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

வெளிநாடுகளுக்கு படிக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்தது!

L.Renuga Devi

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி மநீம வேட்பாளர் ஆர்ப்பாட்டம்!

Saravana Kumar

மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களிலும் ஊரடங்கு அறிவிப்பு!

Gayathri Venkatesan