தமிழகம்

மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர், சமயபுரம் கோயிலுக்கு சென்றுவிட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே கார் வந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் காரில் பயணித்த 5 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படாளம் போலீசார், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:

Related posts

மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்திருப்பது தமிழகம் தான்; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கருத்து!

Saravana

சென்னை ஐஐடியில் மேலும் 79 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!

Saravana

தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்!

Jayapriya

Leave a Comment