தமிழகம் முக்கியச் செய்திகள்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு கொரோனா!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறையில் பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறது செய்யப்பட்டதை அடுத்து அந்தத் துறையை மூட துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் உயிரி தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர் ஒருவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து அவருக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த மாணவர் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து உயிரி தொழில்நுட்பத் துறையில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் துறை மூடப்பட்டது. அந்தத் துறையில் பணியாற்றும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறும்போது, “ஆய்வு மாணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உயிரி தொழில்நுட்பத் துறை மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்கும் வகையில் தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Advertisement:

Related posts

சிறுமி பாலியல் வழக்கில் 3 பேருக்கு 20 ஆண்டு சிறை!

Gayathri Venkatesan

தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை!

Nandhakumar

“வாக்காளர் அடையாள அட்டை வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்..” – சத்யபிரதா சாகு

Jayapriya