தமிழகம் முக்கியச் செய்திகள்

”குடிமராமத்து பணி: இணையத்தில் வெளியிடுக”- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

தமிழகத்தில் நடைபெறக்கூடிய குடிமராமத்து பணிகளை பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் விதமாக இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அன்புநிதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதன்படி, குடிமராமத்து பணி நடைபெறக்கூடிய இடம், பணியின் விவரம், கால அளவு, அதற்காக செலவழிக்கக் கூடிய தொகை, அதில் நடைபெற்றுள்ள பணிகள் என முழு விவரங்களையும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

குடிமராமத்து பணிகள் நடைபெறுவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம், பணி முடிவடைந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.

Advertisement:

Related posts

கொரோனா பலி எண்ணிக்கையை முற்றிலும் கட்டுப்படுத்திய தமிழகம்!

Niruban Chakkaaravarthi

சூரியூர் ஜல்லிக்கட்டு: தற்போது வரை 23பேர் படுகாயம்

Niruban Chakkaaravarthi

விசாகப்பட்டினத்தில் பயங்கர தீ விபத்து; ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்!

Jayapriya

Leave a Comment