குற்றம் தமிழகம் முக்கியச் செய்திகள்

ரூ.16 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானத்தில், வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை சுங்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், களிமண்ணில், தங்க துகள்களை கலந்து, உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 355 கிராம் எடை கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Related posts

குடும்ப அரசியல் நடத்தும் கூட்டணி வெற்றி பெற கூடாது: நடிகை குஷ்பு

Niruban Chakkaaravarthi

10 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

Jayapriya

”அதிமுக, வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்து வெற்றி பெறும்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya