தமிழகம் முக்கியச் செய்திகள்

வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் மதுரை விமான நிலையம் 2 வது இடத்தைப் பிடித்துள்ளது!

ஆண்டிற்கு பத்து லட்சத்திற்கும் மேல் பயணிகள் பயணம் செய்யும் விமான நிலையங்கள் என்ற அடிப்படையில் இந்தியாவில் 50 விமான நிலையங்களில் சில நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் மதுரை விமான நிலையம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

தென் தமிழகத்திற்கு தனது சேவையை வழங்கி வரும் மதுரை விமான நிலையம் சுங்க தீர்வு மற்றும் பன்னாட்டு நிலைபெற்ற விமான நிலையமாகும். 1957ம் நிறுவப்பட்ட இந்த விமான நிலையம் 2014ம் ஆண்டு பன்னாட்டு விமான நிலையத்திற்கான தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த விமான நிலையத்திலிருந்து ஆண்டிற்கு சுமார் 15 இலட்சத்திற்கும் மேல் பயணிகள் பயணப் படுகின்றனர். 12 ஆயிரத்திற்கும் மேல் விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த விமான நிலையம் தமிழகத்தில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கும் மேல் பயணிகள் பயணம் செய்யும் விமான நிலையங்கள் என்ற அடிப்படையில் இந்தியா முழுதும் 50 விமான நிலையங்களில் சில தினங்களுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் பன்னாட்டு விமான நிலையமான மதுரை விமான நிலையம் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது என்று விமான நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கணக்கெடுப்பில் உதய்பூர் விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மதுரை விமான நிலைய நிர்வாகத்தினை நம்பி ஆதரித்த அனைத்து பயணிகள் மற்றும் பங்குதாரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Related posts

புதுச்சேரி: நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது!

Ezhilarasan

சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டி: சரத்குமார்

Saravana

தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த பரிதாபம்!

Jayapriya