குற்றம்

வாடகைக்கு குடியிருந்தவர் கொடுத்த தொல்லையால் வீட்டை காலி செய்துவிட்டு சென்ற வீட்டு உரிமையாளர்

ராமநாதபுரத்தில் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர் அளித்த தொல்லையால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்து விட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிபவர் சுந்தரமாணிக்கம். இவரது மனைவி மகேஸ்வரி ராமநாதபுரத்தில் உள்ள அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் இவர்களுக்கு சொந்தமான வீடு உள்ளது. டி.எஸ்.பி சுந்தரமாணிக்கம் பணி நிமித்தமாக வெளியூரில் இருந்த நிலையில் மகேஸ்வரி தனது மகன்களுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்தான், கடந்த 2 வருடங்களுக்கு முன் இவர்களது வீட்டின் மாடிப்பகுதியை விஜயகுமார் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர். இதன்பின் ஒரு வருடம் கழித்து மகேஸ்வரியின் மகனுக்கு திருமண ஏற்பாடு செய்ததால் வீட்டினை காலி செய்து தருமாறு விஜயகுமாரிடம் கூறியுள்ளனர். இதனை மறுத்த விஜயகுமாரும் அவரது மனைவி சர்மிளாவும், தனது மகள்களுடன் இணைந்து மகேஸ்வரியிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து டி.எஸ்.பி.,யின் மனைவி மகேஸ்வரி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததையடுத்து அவர் இருதரப்பினரையும் விசாரித்த போது, வாடகைக்கு குடியிருந்த விஜயகுமார் 3 மாதங்களில் காலி செய்து விடுவதாக சம்மதம் தெரிவித்து எழுதிக்கொடுத்துள்ளார். 3 மாதங்கள் கழித்தும் வீட்டினை காலி செய்யாத விஜயகுமாருக்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்ததுடன், கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர்களிடம் வாடகைப்பணம் வாங்காமலும் இருந்துள்ளார் மகேஸ்வரி. இந்நிலையில் தற்போது மீண்டும் அவர்களை காலி செய்துத்தரும்படி மகேஸ்வரி கூறியபோது அவர்கள் வீட்டினை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தங்கள் மீது வீண் குற்றச்சாட்டுகளை பரப்பிவருவதாகவும் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

காவல் துணை கண்காணிப்பாளராக உள்ள சுந்தரமாணிக்கம் விரைவில் பணியிலிருந்து ஓய்வு பெற உள்ள நிலையில், இதனை பயன்படுத்தி பணம் பறிக்க விஜயகுமார் குடும்பத்தினர் முயற்சி செய்ய முயற்சிக்கிறார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, ராமநாதபுரத்திலுள்ள வீட்டினை காலி செய்துவிட்டு தற்போது கணவருடன் மானாமதுரையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருவதாக வேதனையுடன் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வர மறுத்த நண்பர் மீது காரை ஏற்றி கொலை… ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்!

Nandhakumar

13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை; போக்சோ சட்டத்தில் கைது..!

Jayapriya

2 ஆண்டுகள் ஆகியும் தீராத வஞ்சம்…சகோதரியை கிண்டல் செய்தவரை தட்டிக்கேட்ட இளைஞர் கழுத்து அறுத்து கொலை!

Saravana