தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

மு.க ஸ்டாலினுக்கு: ஏ.ஆர் ரகுமான், சேரன் வாழ்த்து

தமிழக சட்டமன்றத்தேர்தலில் 138 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்வராகப் பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குநர் சேரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 70 இடங்களைக் கைப்பற்றியது. இந்நிலையில் முதல்வராகப் பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு திரைத்துறை பிரபலங்களான நடிகர் சித்தார்த், ரஜினிகாந்த், தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குநர் சீமான், இயக்குநர் ப.ரஞ்சித் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுதொடர்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புதிய முதல்வராகப் பொறுப்பேற்கும் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் மற்றும் திராவிட முன்னேற்றக்கழக வெற்றியாளர்களுக்கும் அமையவிருக்கும் புதிய அரசுக்கும் வாழ்த்துக்கள். நல்லாட்சி நடக்கட்டும்.நாட்டு மக்கள் நலம் பெறட்டும்.’ என்று பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

6 தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால், தனித்துப் போட்டி! – IJK அதிரடி அறிவிப்பு!

Nandhakumar

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ராகுல் காந்தி சொல்லும் யுக்தி என்ன?

Gayathri Venkatesan

போராட்டத்தில் திடீரென தற்கொலைக்கு முயன்ற மூமுக தலைவர் வாண்டையார்!

Jayapriya