செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

அதிமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர் : மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. மேலும் தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில்,அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்களை ஆதிரித்து அந்தந்த தொகுதியில் வாக்கு சேகரித்து வருகின்றன.

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவுபெற்றன. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில், தேர்தல் பரப்புரை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் , திமுகவில் தாம் 14 வயதில் இணைந்து, படிப்படியாக அரசியலில் முன்னேறியதாக தெரிவித்தார்.

திமுக ஆட்சியின் போது, கன்னியாகுமரி மாவட்டத்தில், திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை, பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம், மார்ஷன் நேசமணிக்கு மணி மண்டபம், ஜீவாவுக்கு மணி மண்டபம், பொய்கை அணை, மாம்பழத்தாறு அணை, குளச்சல், தேங்காய்பட்டினம் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாகவும், மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

Advertisement:

Related posts

பாமக நிர்வாகியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பல்!

Karthick

இரண்டு வாரங்கள் மிகவும் சவாலானது: சுகாதாரத் துறைச் செயலாளர்!

Ezhilarasan

எம்.ஜி.ஆரைப் போல விஜயகாந்தும் வெளியே வராமல் வெற்றிபெறுவார்: விஜய பிரபாகரன்

Nandhakumar