இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

புதுச்சேரியில் ஊரடங்குக்கான அவசியமில்லை – தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா ஊரடங்குக்கான அவசியம் ஏற்படவில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோன பாதிப்பு 43 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 687 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருதால், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனை மையங்களுக்கான சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரி மாநிலம் அபாயகரமான மாநிலங்கள் பட்டியலில் இல்லை என்று கூறினார். எனினும் மருத்துவமனையில் தேவையான படுக்கை வசதிகள் உள்ளதாக கூறிய அவர், ஊரடங்குக்கு அவசியம் இல்லை என்றும் ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

Advertisement:

Related posts

ஆக்ஸ்போர்டு பல்கலைகழக அமைப்பின் இந்தியவைச் சேர்ந்த தலைவர் பதவி விலகல்; காரணம் என்ன?

Niruban Chakkaaravarthi

பிரியங்கா காந்தி தமிழக சுற்றுப்பயணம் ரத்து

Gayathri Venkatesan

சம்பளம் தராத தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

Jayapriya