இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

கடன் தள்ளுபடி நீட்டிக்கப்படாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனா காலத்தில், வங்கிகளில் பெற்றக் கடன் மற்றும் அதன் வட்டியை திருப்பி செலுத்த காலவரையறையை நீடிக்க இயலாது என்றும் கடனை ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்ய இயலாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொரோனா காலத்தில் மக்களின் பொருளாதாரச் சிக்கலை கருத்தில்க்கொண்டு மார்ச் 1 முதல் மே 31ம் தேதிவரை பெற்ற கடன்களின் அசல் தொகையையும் அதன் வட்டியை செலுத்த காலவரையறை ஆகஸ்டு 31ம் தேதி 2020 வரை ரிசர்வ் வங்கி நீட்டித்தது. இந்நிலையில் கொரோனா காலத்தில், வங்கிகளில் பெற்ற கடன் மற்றும் அதன் வட்டியை திருப்பிச் செலுத்தும் காலவரையறையை நீடிக்க வேண்டும் என்றும் அந்த சலுகைக் காலத்தில் கடனை கட்டாமல் இருந்தவர்களுக்கு கூடுதல் வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி அசோக் புஷன் தலைமையில் நீதிபதிகள் ஆர். சுபாஷ் ரெட்டி, எம் ஆர் ஷா அமர்வு முன்பு இன்று விசரணைக்கு வந்தது. கரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வங்கிகளில் பெற்ற கடன் மற்றும் அதன் வட்டியை திருப்பி செலுத்துவதற்கான காலவரைறை நீடிக்க இயலாது. அரசின் நிதிக் கொள்கையில் நீதிமன்றம் தலையிடாது. மார்ச் 31 முதல் ஆகஸ்ட் 31 தேதி வரை வாடிக்கையாளர்கள் பெற்ற கடன்களுக்கு கூடுதல் வட்டியை வசூலித்திலிருந்தால், அந்தத் தொகையை அவர்களிடமே திருப்பி அளிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த தவணையில் செலுத்தும்போது அந்தத் தொகையை கழித்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.

Advertisement:

Related posts

ஆர்டிஐ மனுக்கள் நிராகரிப்பது குறைக்கப்பட்டுள்ளது!

L.Renuga Devi

சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: முத்தரசன்

Saravana

ட்விட்டருக்கு அபராதம் விதித்த ரஷ்யா!

Dhamotharan