இந்தியா முக்கியச் செய்திகள்

இணையத்தில் பேசுபொருளாக மாறிய லிசிபிரியாவின் ட்விட்டர் பதிவு!

பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரியா கங்குஜாம் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரியா கங்குஜாம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த அழகிய பள்ளத்தாக்கு ஒன்றின் புகைப்படத்தைப் பதிவிட்டு, ”இந்த அழகிய பள்ளத்தாக்கானது அரிசோனாவை சேர்ந்தது அல்ல. இது நமது நாட்டை சேர்ந்தது தான். மேலும் இந்த பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடத்தை நான் குறிப்பிட விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதன் இருப்பிடம் தெரிந்தால் நீங்கள் அனைவரும் ஒரு சில ஆண்டுகளில் இவ்விடத்தை நாசம் செய்து விடுவீர்கள். இவ்விடத்திற்கு மக்களின் வருகை இருந்தால் இடம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகளால் நாசமடைந்துவிடும் எனச் சாடியுள்ளார். மக்களின் மத்தியில் நெகிழியின் பயன்பாடு அதிகரித்திருப்பது மற்றும் நெகிழி(plastic) பயன்பாடுகளால் சுற்றுலாத் தலங்களின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை இந்த பதிவின் மூலமாக இவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இவரது ட்விட்டர் பதிவானது தற்போது இணைய வாசிகள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement:

Related posts

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்த இபிஎஸ்- ஓபிஎஸ்!

Jayapriya

மேலிட தலையீட்டால் விரக்தி: கோவா ஆம் ஆத்மி தலைவர் ராஜினாமா!

Arun

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி!

Karthick