பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தை முறியடிப்போம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றதை அடுத்து, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்தனர். அப்போது, ஆளும் காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, முதலமைச்சர் நாராயணசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களின் சந்திப்பை அடுத்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்துப் பேசினார். இதையடுத்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, வரும் 22ம் தேதி சட்டப்பேரவையில பெரும்பான்மையை நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.
Advertisement: