தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தமிழகம் கடந்த 10 ஆண்டுகளாக பாழ்பட்டு போயுள்ளது: மு.க.ஸ்டாலின்

தமிழகம் கடந்த 10 ஆண்டுகளாக பாழ்பட்டு போயுள்ளது, என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

‘கோவை கிணத்துக்கடவு, ஈச்சனாரி சாலையில நடந்த பரப்புரையில் பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அந்தப் பொறுப்புக்கு பெருமையை தேடித் தந்ததாகக் கூறினார். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக அரசுக்கும் இத்தேர்தலில் தக்க பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும் எனவும் ஸ்டாலின் பரப்புரையில் வலியுறுத்தினார்.

முன்னதாக திருப்பூரில் பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், அதிமுக ஆட்சியில், தமிழகத்தின் கடன் அதிகரித்துவிட்டதாகக் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிதி நிலைமையை சீரமைக்க, உயர்மட்டக்குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டு விழாவும், அறிவிப்புகளும் மட்டுமே நடைபெற்றுள்ளன எனவும், முக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

Advertisement:

Related posts

புதிதாக கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்தி!

Niruban Chakkaaravarthi

ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பேருந்து மோதி விபத்து; 6 பேர் உயிரிழப்பு, 17 பேர் படுகாயம்!

Saravana

காஞ்சிபுரம் கல்குவாரியில் மீண்டும் தொடங்கிய மீட்பு பணிகள்..!

Jayapriya