நிலத்தகராறு காரணமாக அதிமுக பிரமுகர் ஒருவர் இளைஞரின் காதை கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இவரது நிலத்தின் அருகில் அதிமுக கள்ளக்குறிச்சி அம்மா பேரவை செயலாளர் கோவிந்தன் என்பவருக்கு 6 ஏக்கர் காடு உள்ளது. இந்த நிலையில் கோவிந்தன் நேற்று தனது வயலில் உள்ள கரும்பு தோகையை எரித்துள்ளார்.
அதன், தீயானது ராஜாவின் கரும்பு பயிரில் பரவியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆத்திரமடைந்த கோவிந்தன், ராஜாவின் காதை கடித்து துப்பியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement: