தமிழகம் முக்கியச் செய்திகள்

ரூ. 20,000 சம்பளத்தில் லேப் டெக்னிஷியன் வேலை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள லேப் டெக்னிஷியன்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.75 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3,449 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர். கொரோனா காலத்தில் பணிபுரிய மருத்துவர்கள் தேவை என்பதால் முதுகலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாகப் பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள லேப் டெக்னிஷியன்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் எக்ஸ்ரே டெக்னிஷியன்கள் தேவை எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு காலம் பணிபுரிய வேண்டும்.

மாத ஊதியம்

லேப் டெக்னிஷியன் – ரூ15,000
எக்ஸ்ரே டெக்னிஷியன் – ரூ20,000

இந்த பணியில் கலந்துகொள்ள விரும்புவோர், மே 7 ஆம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.

Advertisement:

Related posts

அழிவின் விளிம்பில் ஆப்பிரிக்க யானைகள்!

L.Renuga Devi

அமமுகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Gayathri Venkatesan

திமுக எம்.பி. கனிமொழி வாக்களிப்பு!

Gayathri Venkatesan