தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தீவிர பரப்புரையில் எல்.முருகன்!

கூலித் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும், என தாராபுரம் பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்குறுதி அளித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட குண்டடம், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி ஆகிய பகுதிகளில், அவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதில் பேசிய அவர், தான் வெற்றி பெற்றவுடன் வீட்டுமனை இல்லாதகூலித் தொழிலாளர்களுக்கு விரைவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், கல்விக்கடன் மற்றும் கூட்டுறவு வங்கி கடன்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும் என பொதுமக்கள் இடையே உறுதியளித்தார்.

Advertisement:

Related posts

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிட்ட தொகுதிகள் விவரம்!

Gayathri Venkatesan

தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கு பாஜக முயற்சி – திருமாவளவன்

Gayathri Venkatesan

கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனைவி!

Karthick