தமிழகம் முக்கியச் செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்த குஷ்பு: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவரது சொத்து மதிப்பு விவரங்களும் வெளியாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். திமுக சார்பில் மருத்துவர் எழிலனும், அமமுக சார்பில் கஸாசியும் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் நுங்கம்பாக்கத்திலுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் புடைசூழ குஷ்பு வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.


தங்களுக்கு சிறுபான்மை மக்கள் வாக்களிப்பார்கள் எனவும், தோல்வி என்பதற்கு தன்னுடைய டிக்‌ஷனரியில் இடமில்லை எனவும், ஐந்தாண்டு காலமாக அதிமுக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் என்றும் கூறினார்.
குஷ்புவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது கையிருப்பில் 2,15,600 ரூபாய் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ரூ. 33,12,000 மதிப்புள்ள ஃபார்சூனர் டோயோட்டா, ரூ.5,50,000 மதிப்புள்ள மாருதி ஸ்விட் கார்கள் தன்னிடம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். 8.55 கிலோ தங்க நகைகள் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார் குஷ்பு. இதன் மதிப்பு ரூ.3,42,00,000 ஆகும். மொத்தமாக தன்னிடம் 4,55,45,693 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.


வீடுகள், நிலங்கள் உள்பட 17,99,87,500 ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் வேட்புமனு விவரத்தில் குறிப்பிட்டுள்ளார் குஷ்பு. வங்கிகளில் வாங்கியது உள்பட 3,45, 13, 950 கடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி சவால்!

Niruban Chakkaaravarthi

குடும்பத்தில் ஒருவருக்கு நிச்சயமாக அரசு வேலை வழங்கப்படும்: எல்.முருகன்!

Karthick

ஜூன் மாதம் புதிய தலைவர்: காங்கிரஸ் காரிய கமிட்டியில் முடிவு!

Saravana