தமிழகம் முக்கியச் செய்திகள்

உரம் விலையை குறைக்கக்கோரி கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்!

உரங்களின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு டிஏபி., காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களுக்கு அளித்து வந்த மானியத்தை நிறுத்தியதால் உரங்களின் விலை மூட்டை ஒன்றுக்கு, 700 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் சீர்குலைந்து உள்ளதாகவும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார். மேலும் விவசாய தொழிலை கைவிட்டு அவர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

உரங்களின் விலை உயர்வு காரணமாக, அனைத்து உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளின் விலையை, கடுமையாக உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறிவுள்ளார். எனவே உடனடியாக உரங்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

Advertisement:

Related posts

ஜனநாயகக் கடமையாற்றிய கமல்!

Karthick

சீன தடுப்பூசியை போட்டுக்கொண்டால் மட்டுமே விசா: சீன அரசு அதிரடி

Jeba

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,263 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

Karthick