செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

கோயம்பேடு சந்தையில் நாளை சில்லறை விற்பனைக்கு தடை: வியாபாரிகள் போராட்டம்!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகச் சென்னை கோயம்பேடு சந்தையில் நாளை முதல் சில்லறை விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டு கடைகள் மூடப்பட உள்ளதால் சில்லறை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

தமிழக அரசின் சார்பில் நேற்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டது. அதில் கொரோனா பரவல் அதிகரிப்பைத் தடுக்கும் வகையில் மக்கள் அதிகளவு கூடும் பொழுதுபோக்கு தளங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கு, உணவகங்கள் மற்றும் கோயம்பேடு சந்தை உள்ளிட்ட இடங்களில் மக்கள் 50 சதவீதம் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையெடுத்த நாளை முதல் கோயம்பேடு சந்தையில் இயங்கிவரும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்படுவதால் அங்கு இன்று வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவு குவிந்தனர். இருப்பில் உள்ள சரக்குகளை விற்றுத் தீர்ப்பதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டினார். நாளை முதல் கடைகள் மூடப்படுவதால் பொருட்களின் விலை குறைந்து விற்கப்படுகிறது. இதன்காரணமாக கோயம்பேடு பகுதியில் மக்கள் குவியத் தொடங்கினார்கள்.

மேலும் கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை வியாபாரிகள் அரசின் முடிவு ஒழுங்குமுறைப்படுத்தகோரி கோயம்பேடு நிர்வாக அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகிறார்கள். மொத்த வியாபாரிகளுக்கு மட்டும் அரசு அனுமதித்துள்ளதால் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகரிக்குமே தவிர குறையாது. இதன்காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்கவே செய்யும். எனவே சில்லறை வியாபாரிகளையும் விற்பனைச் செய்ய அனுமதிக்கவேண்டும். இரவு 8 மணி முதல் காலை 8 மணிவரை என நேர கட்டுப்பாடு விதித்த மொத்த, சில்லறை வியாபாரிகள் அனுமதிக்கவேண்டும். கடன் வாங்கி வியாபாரம் செய்வதால் தற்போதுதான் சில்லறை வியாபாரிகள் ஒரேளவுக்கு நிதானமான நிலைக்கு வந்துள்ளனர். இதனை கருத்தில்கொண்டு சில்லறை வியாபாரிகளும் விற்பனைச் செய்யும் வகையில் அரசு ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என சில்லறை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:

Related posts

சென்னை-கெவாடியா இடையே புதிய விரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Saravana

பிரதமர் வருகை: போக்குவரத்து மாற்றம்

Niruban Chakkaaravarthi

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது!

Jayapriya