கோயம்பேடு அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, கோயம்பேடு சக்தி நகர் ஒன்றாவது தெருவின் காவல் நிலையம் பூத் அருகே நாரயணண் (23) என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நாரயணண் தனது தம்பி சுபாஸின் பிறந்தநாளை முடித்துவிட்டு திரும்பி வந்துக்கொண்டிருந்த போது இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது.
இதுகுறித்து கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Advertisement: