செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

கோவில்பட்டி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அமைச்சரும், அத்தொகுதியின் வேட்பாளருமான கடம்பூர் ராஜூ வாக்குறுதி அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவில்பட்டியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால், தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தேர்தல் அறிக்கையை குறை கூறுபவர்களுக்கு, நேற்றே ஜூரம் வந்துவிட்டது. மேலும் அதிமுக 100 சதவீத வெற்றியை பெற்றுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக குறை சொல்கின்றனர் எனத் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார் யஷ்வந்த் சின்கா!

Niruban Chakkaaravarthi

தென் தமிழகத்தில் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

Niruban Chakkaaravarthi

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Gayathri Venkatesan