ட்விட்டருக்கு போட்டியாக இந்தியாவில் உருவாகியுள்ள koo செயலியை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
கடந்தாண்டு மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப்போராட்டத்தை அவர்கள் ட்விட்டர் வழியாக உலகளவில் தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து இப்போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாப் பாடகி ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் ட்விட்டர் மூலம் ஆதரவளித்தனர்.
வேளாண் சட்டம் குறித்து தவறான தகவல்கள் ட்விட்டரில் பகிரப்படுவதாகவும், அதுபோன்ற கணக்குகளை முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. இதனால், ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் இடையே சிறு மோதல் உருவானது. இதையடுத்து, இந்தியாவில் உருவாக்கப்பட்ட koo செயலியை மத்திய அமைச்சர்கள் பயன்படுத்த துவங்கினர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலான கால கட்டத்தில் மட்டும் சுமார் 9 லட்சம் டவுன்லோடுகளை koo செயலி பெற்றுள்ளது.
Advertisement: