தமிழகம் முக்கியச் செய்திகள்

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலை!

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் நண்பகல் 12.30 மணி நிலவரப்படி முன்னிலையில் உள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இந்நிலையில் நண்பகல் 12.30 மணியளவில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் 19,171 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அமமுக கட்சி வேட்பாளர் ஜெ. ஆறுமுகம் 240 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் எற்கனவே 2011, 2016 தேர்தலில் வெற்றி பெற்றார். தற்போது 2021 தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றால், அவர் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றியை கைப்பற்றி சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

அதிநவீன CMS -01 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்.. சிறப்பம்சங்கள் என்ன?

Saravana

கொல்கத்தாவுக்கு 153 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பை ஆல் அவுட்

Saravana Kumar

பப்ஜி விளையாட்டால் பறிபோன உயிர்; கண்ணீர்மல்க நிற்கும் மாற்றுத்திறனாளி தாய்!

Jayapriya