விளையாட்டு

தோனியின் சாதனையைச் சமன் செய்த கோலி..

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தோனியின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த 13ம் தேதி தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற கேப்டன் என்ற தோனியின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இதுவரை தோனி தலைமையிலான அணி 30 போட்டிகளில் 21 வெற்றியை பெற்ற நிலையில், கோலி தலைமையிலான அணி 28 போட்டிகளில் 21 போட்டிகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

பும்ரா, சிராஜ் மீது ரசிகர்கள் இனவெறித் தாக்குதல் – இந்திய அணி புகார்

Jayapriya

IND VS ENG; இந்திய அணி அபார வெற்றி

Dhamotharan

IND VS ENG; 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் இந்தியா

Jayapriya

Leave a Comment