முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐதராபாத்தை 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா!

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோற்றது.

ஐபிஎல் போட்டியின் மூன்றாவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய ஷுப்மான் கில் 15 ரன்னில் ஆட்டடமிழந்தார். அவரையடுத்து வந்த நிதிஷ் ராணா உடன் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்து ஐதாராபாத் அணியின் பந்து வீச்சை நாளாபுரமும் சிதறடித்தனர். திரிபாதி 29 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த ரஸெல் 5 ரன்னிலும், மோர்கன் 2 ரன்னிலும் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர்.


அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிதிஷ் ராணா 80 ரன்னில் பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 9 பந்தில் 22 ரன்கள் அடித்தார்.
இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சாஹாவும், டேவிட் வார்னரும் இறங்கினர். இருவரும் வந்த வேகத்திலேயே வார்னர் 3 ரன்னிலும், சாஹா 7 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து இறங்கிய மணீஷ் பாண்டேவும், பேர்ஸ்டோவும் பொறுப்புடன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இவர்கள் பார்ட்னர்ஷிப் 92 ரன்கள் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரையடுத்து வந்த முகமது நபி 14 ரன்னிலும் விஜய் சங்கர் 11 ரன்னில் அவுட்டாகி வெளியேறினர். மணீஷ் பாண்டே மட்டும் தனி ஆளாக நின்று வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்தார். இந்நிலையில், 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. மணீஷ் பாண்டே இறுதி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். இதனால் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement:

Related posts

பாப்பிரெட்டிப்பட்டிக்கு எந்த நலத்திட்டமும் வரவில்லை – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

Gayathri Venkatesan

மொத்த வாக்காளர்கள் 90, பதிவான வாக்குகள் 181: அசாம் மாநில தேர்தல் குளறுபடிகள்!

Karthick

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர், என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் மோரிஸ்!

Nandhakumar