முக்கியச் செய்திகள் விளையாட்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருவருக்கு கொரோனா: இன்றை ஆட்டம் ஒத்திவைப்பு!

கொல்கத்தா அணி வீரர்களுக்கு இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.

கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

.

கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதும் ஆட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டதற்குப் பிறகு ஆட்டம் நடைபெறும் நாள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:

Related posts

இளம் தலைமுறையினரின் வளர்சிக்கான அரசாக பாஜக இருக்கும்: பிரதமர்

Karthick

முதல்வரின் திடீர் டெல்லி பயணம் ஏன்? – திருமாவளவன் எம்.பி கேள்வி

Niruban Chakkaaravarthi

நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும்: ஸ்டாலின்!

Karthick