செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

ஜெயலலிதா பாணியில் பரப்புரை செய்த குஷ்பு!

ஆயிரம் விளக்கு தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா பாணியில் குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார். 

ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்புவும், திமுக சார்பில் எழிலனும் போட்டியிடுகின்றனர். தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு  வருகின்றனர்.

இந்த நிலையில் குஷ்பு பரப்புரையில் பேசுகையில், துணி துவைப்பது எவ்வளவு கஷ்டம் என்று யாராவது ஒரு பெண்ணைக் கேட்டுப் பாருங்கள், துணி துவைக்க வாஷிங் மெஷின் தந்தால், அந்தப் பெண்ணால் நிம்மதியாக அமர்ந்து டீ குடிக்க முடியும். அந்த நிம்மதியைத் தர விரும்புகிறோம் எனக் குறிப்பிட்டார். 

இந்த ஆணாதிக்க உலகில் என்னை நீங்கள் ஜெயிக்க வைத்தால், அது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தைரியத்தைக் கொடுக்கும் என்ற அவர், என்னை வெற்றிபெறச் செய்தால், நான்  உங்கள் சகோதரியாக வேலை செய்வேன், ஆயிரம் விளக்கு தொகுதி, ஆயிரம் விளக்குகளைப் போன்று ஜொலிக்க  நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

மேலும், “செய்வீர்களா? என்று ஜெயலலிதா கேட்பதைப் போல் நான் கேட்கிறேன். மக்களாகிய உங்களுக்காக நான் இருக்கிறேன், ஜெயலலிதா இருக்கிறார். என்னை சட்டசபைக்கு நீங்கள் அனுப்புவீர்களா?” என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் மக்களிடம் பிரச்சாரம் செய்தார் குஷ்பு. 

Advertisement:

Related posts

மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ்: சிபிஎஸ்இ

L.Renuga Devi

பழனியை தனிமாவட்டமாக உருவாக்க கோரிக்கை!

Niruban Chakkaaravarthi

திமுகவுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி: காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது!

Karthick