செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

ஆயிரம் விளக்குத் தொகுதியில் குஷ்பு பின்னடைவு

ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட குஷ்பு பின்னடைந்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திமுக முன்னிலை பெற்றது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு

இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆயிரம் விளக்கு தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்ட குஷ்பு, காலை 10.30 மணி நிலவரப்படி பின்னடைவு பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் முன்னிலை பெற்றுள்ளார். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் அதிமுக, திமுக தலைமையில் ஓர் கூட்டணியும், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தலைமையில் ஓர் அணியும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி, தனியாக போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகின.

Advertisement:

Related posts

மாசில்லாத கட்டுமானங்களை உருவாக்க முனையும் மாற்றுக்குழு!

Jeba

தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் ராகுல் காந்தி!

Gayathri Venkatesan

தொண்டாமுத்தூர் தொகுதி எடுத்துக்காட்டாக விளங்குகிறது – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதம்!

Gayathri Venkatesan