உலகம் செய்திகள் முக்கியச் செய்திகள் வணிகம்

உலக கோடிஸ்வரர் பட்டியலில் இடம்பெற்ற 18 வயது இளைஞர்!

உலக கோடிஸ்வரர்களின் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டது. அதில் உலகில் மிக இளம் வயதில் பணக்காரராக அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் இடம்பெற்றுள்ளார்.

ஃபோர்ப்ஸ் நாளிதழ் தனது 35-வது ஆண்டு கோடிஸ்வரர் பட்டியலில் வெளியிட்டுள்ளது. இதில் உலக நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 2,775 பணக்காரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் இந்தாண்டு மட்டும் 660 பேர் புதியதாக இடம்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருடைய சொத்து மதிப்பும் மொத்தம் 13.1 ட்ரில்லியன் டாலர் மதிப்பாகும். கொரோனா ஊரடங்கு இருந்த போதும் கடந்த 2020-ம் ஆண்டைவிட இந்த ஆண்டு உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு 8 ட்ரில்லியன் டாலர் உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

இந்த கோடிஸ்வரர்கள் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயதாக கெவின் டேவிட் லெஹ்மன் இடம்பெற்றுள்ளார். இவர்தான் உலகின் மிக இளைய வயதுடைய பணக்காரர் என போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
கெவின் டேவிட்கு தற்போது 330 கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரர் ஆவார். கெவினுக்கு இவ்வளவு சொத்து மதிப்பு வர முக்கிய காரணம் அவருடைய தந்தை குந்தர் லெஹ்மன்தான். இவர் ஜெர்மனியின் மிகப்பெரிய மருந்துக்கடையான ‘Dm-drogerie market’ நிறுவனத்தை நிறுவியவர். தன்னுடைய சொத்து மதிப்பில் குறிப்பிட்ட பங்கை தன் மகனுக்கு எழுதிவைத்துள்ளார். இதன்காரணமாக கெவின் டேவிட் லெஹ்மனுக்கு இளம் வயது பணக்கார பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

Advertisement:

Related posts

தமிழகத்தில் ஓய்ந்தது தேர்தல் பரப்புரை!

Saravana Kumar

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜப்தி; நின்றுகொண்டே பணியாற்றிய அலுவலர்கள்!

Jeba

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து வர தடை: மகாராஷ்டிர அரசு!

Jayapriya