இந்தியா செய்திகள் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

கவனம் ஈர்க்கப்படும் கேரள தேர்தல்!

கேரள சட்டமன்ற தேர்தலுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

கேரளாவில் 15 வது சட்ட சபைக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. தமிழகம், கேரளா, புதுவை ஆகிய பகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கேரளாவில் மாநிலத்தில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு 2 கோடியே 74 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி 97 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி கைபற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சி 47 இடங்களிலும், பாஜக 1 இடத்தில் வெற்றி பெற்றன.

முதல்வர் பினராயி விஜயன் தர்மதம் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சி. ரகுநாதன், பாஜக சார்பில் சி.கே.பத்மநாபன் போட்டியிடுகிறார்கள். முன்னதாக காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தேசியச் செயலாளரான தேவராஜன் காங்கிரஸ் கட்சிக்கு பதில் பினராயி விஜயனை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மத்திய தேர்தல் குழு நேற்று நடத்திய ஆலோசனையில்,“தர்மதம் தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்த்து தேசியச் செயலாளர் தேவராஜனை நிறுத்த விருப்பமில்லை” என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையெடுத்து தேவராஜன் தன்னுடைய வேட்புமனுவை திரும்பப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை நடைபெறவுள்ள கேரள சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு தீவிரப் படுத்த பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் 12 மண்டலங்களில் ஒரு மண்டலத்தில் மாவேஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ளதால் ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே மாலை 6 மணிக்கு அப்பகுதியில் வாக்குப்பதிவு நிறைவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

திமுக கூட்டணியில் இருப்பவர்கள் ஏசி அறையில் இருக்கும் முதலாளிகள்: அன்புமணி ராமதாஸ்

Karthick

அனைத்து ரயில்களையும் இயக்கமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

Jeba

சசிகலா வருகையை யாராலும் தடுக்க முடியாது: டிடிவி தினகரன்

Jeba