இந்தியா முக்கியச் செய்திகள்

”எஞ்சாயி எஞ்சாமி” பாடலுக்கு நடனமாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் கேரள காவல்துறை!

சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான ’எஞ்சாயி எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய கேரளா காவல்துறையினரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலை வேகமெடுத்துள்ளது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவில் 2வது அலையால் குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், கேரளா காவல்துறை கொரோனா விழிப்புணர்வு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சந்தோஷ் நாராயணன் இசையில் தீ, தெருக்குரல் அறிவு பாடிய ‘எஞ்சாயி எஞ்சாமி பாடலுக்கு 9 காவலர்கள் இணைந்து நடனமாடி கொரோனா காலத்தில் மக்களை முகக்கவசம் அணிய வேண்டும் என்பதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அந்த வீடியோவில் சானிடைசர் பயன்படுத்துவதின் அவசியத்தையும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுபோன்று 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அய்யப்பனும் கோஷியும் படத்தில் வரும் பாடலுக்கு கை கழுவுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

இந்தியாவிற்கு உதவி கரம் நீட்டிய சர்வதேச நாடுகள்!

Ezhilarasan

பொது இடங்களில் அனுமதி பெறாத சிலைகள் அகற்றப்படுமா? நீதிமன்ற உத்தரவு

Karthick

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை?

Jeba