மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை கேரளாவில் அமல்படுத்துவதில்லை என்று அந்த மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று தொடங்கிய கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராய் விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், நாடு சிக்கலான சூழலை எதிர்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். எனவே போராடும் விவசாயிகளுக்கு மாநில அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டிய சூழல் எழுந்திருப்பதாக கூறினார்.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று சட்டங்களும் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் கேரள முதலமைச்சர் குறிப்பிட்டார். முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்ததால் பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Advertisement: