இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

பாடலுக்கு ஏற்றவாறு கால்பந்தை விளையாடும் இஸ்லாமிய இளம் பெண்!

கேரளாவைச் சேர்ந்த 18 வயதான இஸ்லாமியப் பெண், கால்பந்தை ராப் பாடலுக்கு ஏற்றவாறு விளையாடும் காட்சிகள், சமூகவலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

கேரளாவின் கோழிக்கோட்டில் வசித்து வரும் ஹத்திய ஹக்கீம்க்கு 18 வயதாகிறது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவருக்கு கால்பந்து மீது அதீத ஆர்வம் உண்டு. ராப் பாடலுக்கு தகுந்தவாரு இவர் கால்பந்தை தரையில் படாமல் விளையாடும் விதம் தற்போது சமூகவலைதளங்கில் வைரலாகி வருகிறது. கேரளாவில் தற்போது வசித்தாலும் இவர் பிறந்தது கத்தாரில்தான். அங்குதான் இவர் கால்பந்தாட்டத்தை கற்றுக்கொண்டார்.

ஹத்திய 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, இந்தியாவிற்கு இவர்களது குடும்பம் இடம்பெயர்ந்துவிட்டது. மேலைநாடுகளைப்போல இந்தியாவில்
பெண்கள் கால்பந்து விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது ஹத்திய ஹக்கீம்க்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பள்ளியில் நடந்த இறுதியாண்டு கால்பந்து போட்டியில் இவர் கால்பந்தை தரையில் விழாமல் சுழற்றி விளையாடும் காட்சி, பள்ளி ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த வீடியோவை ஹத்திய தனது இஸ்டிராகிராமில் பதிவிட்டுள்ளார்.

இவரது இஸ்டிராகிராம் பக்கத்தை 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கிறார்கள். இவர் இளம் தலைமுறை பெண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிறார்.

Advertisement:

Related posts

தோனியின் புதிய கெட்டப் சமூக வலைதளத்தில் வைரல்!

Gayathri Venkatesan

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா?..அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

Saravana

சட்டமேதை அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

Niruban Chakkaaravarthi